சினிமா முக்கியச் செய்திகள்

மாலத்தீவுக்குச் செல்வதற்குத் தடை: மனமுடைந்த பாலிவுட் நடிகர்கள்- ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் இந்தியாவிலிருந்து வருபவர்களுக்குத் தடைவிதித்துள்ளது. இந்த தடையால் பாலிவுட் நடிகர்கள் மனமுடைந்துவிட்டதாக நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டுக் கலாய்த்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனாவின் முதல் அலையை இந்தியா சந்தித்தபோது, நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த பொது முடக்கத்தின்போது திரைத்துறை பிரபலங்கள் பலரும் வீட்டில் சமைப்பது, சுத்தம் செய்வது என்று வீடியோக்களை எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றினர். ஊரடங்கு முடிந்தவுடன் பாலிவுட் நடிகர்கள் பலரும் ’எடுடா போன போடுடா மாலத்தீவுக்கு ஒரு டிக்கெட்டை’ என்றபடி மாலத்தீவுக்கு சென்று ஏகபோகமாக நேரத்தைச் செலவிட்டனர்.

அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், கடற்கரையில் ஒரு செல்ஃபி, தங்கியிருக்கும் ஆடம்பர ரிசார்ட்டில் ஒரு செல்ஃபி என்று பார்ப்பவர்கள் அனைவருக்கும் பொறாமை கொள்ளும் அளவிற்கு மகிழ்வாக இருந்தனர். ஆலியா பட், ரன்பீர் கபூர், கரினா கப்பூர், ஷாரூக்கான் உள்ளிட்ட பலரும் மாலத்தீவுக்கு சென்று ஆனந்தமாக நேரத்தை கழித்தனர்.

இந்நிலையில் தற்போது மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் இந்தியாவிலிருந்து வருபவர்களுக்குத் தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக மாலத்தீவு அமைச்சகம் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பதிவு செய்திருந்தது. இந்த ட்வீட்டில் ‘ கொரோனா பரவல் காரணமாக இந்தியர்களுக்கு தங்களது தீவுகளில் தங்குவதற்கும், சுற்றிப் பார்ப்பதற்கும் அனுமதியில்லை’ என்று ட்வீட் செய்திருந்தது.

இந்த ட்வீட்டுக்கு கிழே பல பாலிவுட் நடிகர்களைக் கலாய்த்து மீம்ஸ்களை நெட்டீசன்கள் பகிர்ந்து வருகின்றனர். ஆலியா பட் இந்தச் செய்தியைப் பார்த்து அழுவதுபோலவும், நடிகர்கள் ஷாரூக்கான், ரன்பீர் கபூர் அழுவதுபோலவும் மீம்ஸ்களை உருவாக்கி ட்விட்டரில் நெட்டிசன்கள் பகிர்ந்துள்ளனர்.

Advertisement:

Related posts

நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் பிரச்சாரம்!

Saravana Kumar

நேற்றைவிட இன்று ஓரளவு குறைந்த கொரோனா உயிரிழப்பு!

Karthick

ஒபிஎஸ்ஸை ஆதரித்து ரவீந்திரநாத் தேர்தல் பரப்புரை!

Saravana Kumar