செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

உணவு பில் குறித்து தேஜஸ்வி சூர்யா கருத்தை மறுத்த ஹோட்டல் நிர்வாகம்!

பாஜக இளைஞரணி துணைத் தலைவர் தேஜஸ்வி சூர்யா கோவையில் உள்ள பிரபல ஹோட்டலான அன்னபூர்ணாவில் காலை உணவருந்திவிட்டு கட்டணம் செலுத்தியது தொடர்பாகக் கருத்து ஒன்றைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில் திமுகவை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் தேஜஸ்வி கருத்துக்கு ஹோட்டல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பாஜக இளைஞரணி துணைத் தலைவர் தேஜஸ்வி சூர்யா கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் கடந்த 2-ம்தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது நடைப்பயணமாகச் சென்ற அவர் பூங்காவில் இருந்தவர்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

பின்னர் அப்பகுதியில் இருந்த பிரபல ஹோட்டலான அன்னபூர்ணாவில் காலை உணவை தொண்டர்களுடன் சாப்பிட்டார். பின்னர் இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த தேஜஸ்வி சூர்யா, “இன்று உணவகத்தில் காலை உணவுக்குப் பிறகு, நான் இயல்பாகவே பணம் செலுத்தச் சென்றேன். காசாளர் பணத்தை ஏற்க தயங்கினார். மிகுந்த தயக்கத்துடன் அவரை வற்புறுத்தலுக்குப் பிறகு நான் கொடுத்த தொகையை ஏற்றுக்கொண்டார்.
நாங்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்று அவரிடம் சொன்னேன். எங்களுடைய கட்சி அனைவரையும் மதித்து அனைவரையும் பாதுகாக்கும் கட்சி. நாங்கள் திமுகவை போல் நடந்துகொள்ளமாட்டோம்” என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தேஜஸ்வி கருத்தை மறுத்து ஹோட்டல் அன்னபூர்ணா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கருத்தை வெளியிட்டுள்ளனர், “அன்புள்ள தேஜஸ்வி சூர்யா எங்கள் உணவகத்தில் உங்களுக்கு சேவை செய்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அன்னபூர்ணாவில் நாங்கள் அனைவரையும் ஒரே அன்புடனும் நன்றியுடனும் வாழ்த்துகிறோம், உண்மையில் எல்லோரும் தங்கள் கட்டணங்களைச் செலுத்த முன்வருகிறார்கள். யாரும் எங்களை எதையும் இலவசமாக கொடுக்க கட்டாயப்படுத்தவில்லை. அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, சில நேரங்களில் நம் சமூகத்திற்காக உழைக்கும் மக்களிடமிருந்து பணம் வாங்குவதை நாங்களே தவிர்ப்போம்” என கூறியுள்ளனர்.

இந்நிலையில் தேஜஸ்வி சூர்யாவின் ட்வீட்டர் பதிவையும் ஹோட்டல் அன்னாபூர்ணாவின் கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Advertisement:

Related posts

வெடித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!

Saravana Kumar

“தமிழகத்தில் காலூன்ற பாஜக மேற்கொள்ளும் முயற்சிகள் பலிக்காது” – மு.க.ஸ்டாலின்

Saravana Kumar

துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த புதிய உத்தரவை பிறப்பித்தார் ஜோ பைடன்!

Karthick