தமிழகம் தொழில்நுட்பம் தேர்தல் 2021

தாய்மொழி தெலுங்கில் பேசி பரப்புரை மேற்கொண்ட எல்.முருகன்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் எல்.முருகன் தன்னுடைய தாய்மொழி தெலுங்கில் பேசி பரப்புரை மேற்கொண்டார்.

தாராபுரம் அருகே உள்ள எரசினாம்பாளையம் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “ஈரோடு முதல் பழனி வரை புதிய ரயில் பாதை திட்டமும், மூலனூர் பகுதியைத் தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

தாராபுரத்தில் முக்கிய திட்டங்களான ஈரோடு முதல் பழனி வரை புதிய ரயில் பாதை திட்டம் மருத்துவக் கல்லூரி அரசு கலைக்கல்லூரி மூலனூர் பகுதியை தனி தாலுகா மாற்றுவது மூலனூர் பகுதியில் அதிகம் விளையக்கூடிய முருங்கைக்காய் பயிருக்கு ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்படும். ஆகையால் தன்னை வெற்றிபெறச் செய்ய தாமரை சின்னத்தில் வாக்களித்து தாமரையை வெற்றிபெறச் செய்யவேண்டும் என தன்னுடைய தாய்மொழியான தெலுங்கில் பேசி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

பாஜக தலைவர் எல்.முருகன் தெலுங்கில் பேசியபோது கூட்டத்திலிருந்தவர்கள் உற்சாகமாகக் கைதட்டி வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல வாக்குறுதிகள், மத்திய அரசின் திட்டங்களைக் காப்பியடித்துள்ளதாக விமர்சனம் செய்தார். திமுகவினருக்குக் கொள்ளையடிப்பது மட்டுமே தெரியும் தாராபுரத்தில் நிலம் அபகரிப்பு புகார்கள் அதிக அளவில் உள்ளது ஆகையால் அவர்கள் சொல்வது எல்லாம் பொய் என எல்.முருகன் விமர்சனம் செய்தார்.

Advertisement:

Related posts

விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

Jeba

தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன் லைனில் நடத்தி கொள்ளலாம் – அமைச்சர் செங்கோட்டையன்

Nandhakumar

வேளாண் சட்டத்தில் ஜனநாயகம் கடைபிடிக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

Saravana