செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எல். முருகன், குஷ்பூ, எச். ராஜா போட்டி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 17 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது.

வேட்பாளர் பட்டியலை பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் வெளியிட்டார்.
தராபுரம் தனித்தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல் முருகன் , ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு, கோவை தெற்கு வானதி சீனிவாசன் , காரைக்குடி- எச். ராஜா, அரவக்குறிச்சி- அண்ணாமலை , நாகர்கோவில் – எம். ஆர் . காந்தி, திருநெல்வேலி- முன்னாள் எம் எல் ஏ நயினார் நாகேந்திரன் , திட்டக்குடி – டி .பெரியசாமி.

இந்நிலையில் இன்று காலை திமுகவிருந்து பாஜகவில் இணைந்த டாக்டர் எஸ் பி சரவணனுக்கு மதுரை வடக்கு தொகுதி வழங்கப்பட்டது. அதைபோல் அதிமுகவிலிருந்து பாஜகவில் சமீபத்தில் இணைந்த டாக்டர் சி. கெ . சரஸ்வதி மொடக்குறிச்சி தகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் தற்போது 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் முதல்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.

 • தாராபுரம் (தனி)- எல். முருகன்
 • ஆயிரம் விளக்கு – குஷ்பூ
 • கோவை தெற்கு- வானதி சீனிவாசன்
 • காரைக்குடி- எச். ராஜா
 • அரவக்குறிச்சி- அண்ணாமலை
 • நாகர்கோவில் – எம். ஆர் . காந்தி
 • மதுரை வடக்கு- டாக்டர் எஸ். பி சரவணன்
 • விருதுநகர்- சி.ஜி பாண்டுரங்கன்
 • ராமநாதபுரம்- டி. குப்புராம்
 • திருநெல்வேலி- முன்னாள் எம் எல் ஏ நயினார் நாகேந்திரன்
 • கொளச்சல்- பி. ரமேஷ்
 • திருவையாறு- பூண்டி எஸ். வெங்கடேஷ்
 • திட்டக்குடி- டி .பெரியசாமி
 • மொடக்குறிச்சி- டாக்டர் சி. கெ . சரஸ்வதி
 • திருக்கோவிலூர்- முன்னாள் எம் எல் ஏ கலிவரதன்
 • துறைமுகம்- வினோஜ் பி. செல்வம்
Advertisement:

Related posts

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

Saravana

மக்கள் பணியை எப்போதும்போல் செய்யவேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின்!

L.Renuga Devi

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் நீக்கம்!

Jeba