இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றி கொரோனா நோயாளிகளுக்கு உதவும் இளைஞர்!

போபாலை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றி, கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக உதவி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அறிக்கையின்படி, புதிதாக 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள் ளது. இதையடுத்து இந்தியாவில் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை, 1 கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 976 ஆகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், 3 ஆயிரத்து 498 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் கிடைக்காமலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் கிடைக்காமலும் அவதிப் பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜாவித் கான் என்பவர், தனது ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றி கொரோனா நோயாளி களை இலவசமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்.

இதுபற்றி ஜாவேத் கூறும்போது, ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதை செய்தி சேனல் கள் மற்றும் சமூக வலைதளங்களில், பார்த்தேன். அதனால் என் ஆட்டோவை ஆம்புலன்ஸ் போல மாற்றி உதவ முடிவு செய்தேன். என் மனைவியின் நகைகளை விற்று இப்படி மாற்றி அமைத்துள்ளேன். என் போன் நம்பர் சமூக வலைதளங்களில் கிடைக்கிறது. ஆம்புலன்ஸ் கிடைக்காவிட்டால் மக்கள் என்னை அழைக்கலாம். கடந்த 15, 20 நாட்களாக இதை செய்து கொண்டிருக்கிறேன். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சீரியசான 9 பேரை, என் ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

காவிரியின் துணை ஆறுகளை மேம்படுத்த ரூ. 3,159 கோடி ஒதுக்கீடு!

Jayapriya

காலையில் அமமுக, மாலையில் பாஜகவில் இணைந்த எம்எல்ஏ வேட்பாளர்!

Karthick

சாலை பணி முறைகேட்டால் தனியார் நிறுவனத்தில் சோதனை: ரூ.20 கோடி மோசடி?

Gayathri Venkatesan