தனக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்கிற பிரச்சாரத்தை நிறுத்த வேண்டுமென ரத்தன் டாடா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவின் பெயர் இணையத்தில் பேசு பொருளாக மாறியது. தன்னம்பிக்கை பேச்சாளரான விவேக் பிந்த்ரா இந்த பிரச்சாரத்தைத் தொடங்கிவைத்தார். டாடாவின் மனிதநேயப் பண்புகள், கொடை உள்ளத்திற்காக அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என #BharatRatnaForRatanTata என்ற பெயரிலான ஹாஷ்டேக் இணையத்தில் அதிக பதிவுகளைக் கண்டது.
இந்த நிலையில் ரத்தன் டாடா தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு விருது வழங்க வேண்டுமென சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளிப்படுத்துபவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். இதுபோன்ற பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், தான் ஒரு இந்தியனாக இருப்பதை அதிருஷ்டமாக கருதுவதாகவும், இந்தியாவின் வளர்ச்சியில் பங்களிக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement: