தமிழகம் முக்கியச் செய்திகள்

திருப்பத்தூரில் பள்ளி மாணவனை அலைக்கழித்த வங்கி மேலாளர்!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பள்ளி மாணவருக்கு வங்கி கணக்கு தொடங்க அலைக்கழிப்பு செய்ததால், வங்கி முன்பு மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஏலகிரிமலை மங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் புவனேஷ்(17). இவர் பர்கூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குவதற்காக வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறியது. இதனால் மாணவன் ஏலகிரி மலை அத்தனாவூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் வங்கி கணக்கு தொடங்க சென்றார். ஆனால் வங்கி மேலாளர் இன்று நாளை என அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. மேலும் பள்ளியில் இருந்து வங்கி கணக்கு தொடங்க கோரிக்கை சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என வங்கி மேலாளர் கூறியுள்ளார். மாணவனும் கோரிக்கை சான்றிதழ் கொடுத்துள்ளார்.

இறுதியில் 18 வயதுக்குள்ளவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்க முடியாது என வங்கி நிர்வாகம் கூறியது. இதனால் விரக்தியடைந்த மாணவன் மற்றும் அவரது தந்தை, உறவினர்கள் நேற்று மாலை வங்கி முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.பின்னர் தகவலறிந்த ஏலகிரிமலை போலீசார் அங்கு சென்று தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் தர்ணாவில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் வங்கி மேலாளரிடம் கேட்டபோது மாணவனுக்கு வங்கி கணக்கு தொடங்க முடியாது என கூறவில்லை. மாணவனிடம் பான் கார்டு கொடுக்க வேண்டும்; அதன்பின் வங்கி கணக்கு தொடங்கவதாக கூறினேன். அவர் பான் கார்டு கொடுக்காததால் தாமதமாகிவிட்டது என விளக்கம் அளித்தார்.

Advertisement:

Related posts

தமிழக வளர்ச்சி படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது- மு.க.ஸ்டாலின்!

Jayapriya

நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

Saravana

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

Saravana