இந்தியா முக்கியச் செய்திகள்

இன்று முதல் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை!

ஹோலி பண்டிகை மற்றும் மாதத்தின் 4வது சனிக்கிழமை காரணமாக இன்றிலிருந்து 7 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது, இடையில் 2 நாட்கள் மட்டும் வங்கிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளுக்கும் இன்று முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரையிலான 9 நாட்களில் 7 நாட்களுக்கு விடுமுறையாகும். இடையிலுள்ள 2 நாட்கள் மட்டும் வங்கிகள் வழக்கம் போல செயல்படும். இன்று மாதத்தின் கடைசி சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை. மேலும் 29-ம் தேதி ஹோலி பண்டிகையாகும். இதனால் தொடர்ந்து 3 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது. தமிழகத்தில் ஹோலி பண்டிகைக்கு விடுமுறை இல்லாததால் அன்று வழக்கம் போல் வங்கிகள் செயல்படும். மார்ச் 31-ம் தேதி நிதி ஆண்டின் இறுதி நாள் என்பதால் வங்கி ஊழியர்களுக்கு மட்டுமே அலுவலகத்தில் அனுமதி, பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

இதனையடுத்து, ஏப்ரல் 1-ம் தேதி வங்கி கணக்கு முடிக்கும் நாளாகும், 2-ம் தேதி புனித வெள்ளி தினத்தைத் தொடர்ந்து 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. இதன் இடையிலுள்ள 2 நாட்களான மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 3 ஆகிய நாட்களில் வங்கிகள் செயல்படும். ஆனால் பாட்னாவிலுள்ள வங்கிகளுக்கு மட்டும் மார்ச் 30-ம் தேதி அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் மார்ச் 30 அன்று வங்கிகள் செயல்படும். விடுமுறையின் காரணமாக வங்கிகளின் சேவைகள் பெற முடியாது. ஆனால், ஏ.டி.எம், மொபைல் பேங்கிங் மற்றும் ஆன்லைன் பேங்கிங் போன்றவை செயல்படும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Related posts

இரவிலும் நீடித்த விவசாயிகளின் செங்கோட்டை முற்றுகைப் போராட்டம்!

Nandhakumar

1 மில்லியன் டாலர் வைர மோசடி; நீரவ் மோடியின் சகோதரர் மீது குற்றச்சாட்டு!

Saravana

வில்லனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்

Ezhilarasan