செல்வராகவன் இயக்கியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வருகிற மார்ச் 5ம் தேதி வெளியாக உள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை வெளியிட தடைக்கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் மனுதாக்கல் செய்யபட்டது. இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, என்னை நோக்கி பாயும் தோட்ட படத்திற்காக எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தரவேண்டிய 1 கோடியே 24 லட்சம் ரூபாயை திரும்ப அளிக்கும் வரை அந்த நிறுவனம் தயாரித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்
Advertisement: