சங்கரன்கோவிலில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் உடல் கிணற்றில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாலாஜி நகர் அருகே பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் பிறந்து சில நாட்களே ஆன நிலையில் குழந்தை ஒன்று இறந்து கிடந்ததாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சின்ன கோவிலங்குளம் காவல் துறையினர் அந்த கிணற்றை பார்த்த போது அழுகிய நிலையில் குழந்தை இறந்து கிடப்பதைப் கண்டனர். பின்னர் அந்த குழந்தையின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Advertisement: