நாட்டில் உள்ள விமான நிலையங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும் பாதுகாப்பு கட்டணம் வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது.
மத்திய விமான போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், நாட்டில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும் பாதுகாப்பு கட்டணம் வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது.
பயணிகள் விமான பயணச்சீட்டைப் பதிவு செய்யும்போதே பாதுகாப்பு கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது உள்நாட்டுப் பயணிகளிடமிருந்து பாதுகாப்பு கட்டணமாக ரூ. 160 வசூலிக்கப்படுகிறது. இந்த தொகை வரும் ஏப்ரல் முதல் ரூ.200 உயர்த்தப்படுகிறது.

அதேபோல் வெளிநாட்டுப் பயணிகளிடமிருந்து விமான பாதுகாப்பு கட்டணம் 5.20 டாலரிலிருந்து 12 டாலராக உயர்த்தப்படப்பட்டுள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட இந்த புதிய கட்டணம் வரும் ஏப்ரல் 1- ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணம் விமான பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான பாதுகாப்பு கட்டணம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உள்நாட்டுப் பயணிகளுக்கு ரூ.150-லிருந்து ரூ.160- ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல் வெளிநாட்டுப் பயணிகளுக்கு 4.85 டாலரிலிருந்து 5.20 டாலராக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆறு மாத இடைவெளிக்குள் விமான பாதுகாப்பு கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement: