தமிழகம் முக்கியச் செய்திகள்

மக்கள் சேவைக்கட்சிக்கு வழங்கப்பட்ட ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு!

மக்கள் சேவை கட்சிக்கு அளிக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை திரும்ப பெற தேர்தல் ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017ம் ஆண்டு தான் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாகவும், ஆன்மிக அரசியல்தான் தனது பாதை என்று தெரிவித்தார். அவரது அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்பின் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் தொடங்கப்போகும் கட்சிக்கு மக்கள் சேவை கட்சி என பெயரிட்டு அது அவரின் பெயரில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் கட்சியின் சின்னமாக ஆட்டோ ரிக்ஷா பெறப்பட்டது.

எதிர்பாராத விதமாக, கட்சி தொடங்கும் எண்ணத்தை ரஜினி கைவிட்டார். எனவே, ஒதுக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷா சின்னம் மக்கள் சேவை கட்சி சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. மக்கள் சேவை கட்சியின் கோரிக்கையை ஏற்று, ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை திரும்ப பெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement:

Related posts

புத்துணர்வு முகாமுக்கு தயாரான சங்கரன்கோவில் யானை!

Niruban Chakkaaravarthi

கோயம்பேட்டில் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும்: வியாபாரிகள் சங்கம்!

Ezhilarasan

வாட்ஸ்அப் செயலியை தவிர்க்க உச்சநீதிமன்றம் முடிவு!

Saravana Kumar