ஆஸ்திரேலியாவில் பெய்து வரும் கனமழையால் கிழக்கு கடற்கரைப் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சிட்னியில் உள்ள சில முக்கிய அணைகள் நீரம்பி வழிவதால், சாலைகளில் மழைநீர் அதிவெகமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதால் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள், பாதுகாப்பாக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த பேரிடரானது கடந்து 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடுமையாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் சிட்னியில் உள்ள முக்கிய சாலைகளின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்ட மழை வெள்ளத்தால், நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement: