செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

“சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்ற முயற்சி” -தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார்கள்” என பாஜகவை குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சேலம், சீலநாயகன்பட்டியில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய திருமாவளவன், “தமிழகத்தை பாஜகவிடம் இருந்து மீட்க வேண்டும், தமிழகத்தை ஆக்கிரமிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எங்கள் கூட்டணி தேர்தல் நேரத்தில் உருவான கூட்டணி இல்லை. எங்களுடைய ஒரே நோக்கம் ஆட்சியை கைப்பற்று மட்டுமல்ல ஜாதி, மத சக்திகளிலிருந்து மாநிலத்தை மீட்க வேண்டும் என்பதும்தான். கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என பாஜக முயன்று வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் மதவெறியை தூண்டிவிட்டு அதிகாரத்தை கைப்பற்றி விட்டார்கள். கடந்த 50 ஆண்டுகாலமாக அவர்கள் நினைத்தது நிறைவேறாமல் தோற்றுப் போய் நிற்கிறார்கள். அவர்களின் ஜம்பம் பலிக்கவில்லை.” என்று கூறியுள்ளார்.

மேலும், “தற்போதைய சூழலில், கருணாநிதியை விட ஸ்டாலின் தமிழகத்தை வலிமைப்படுத்த முயன்று வருகிறார். சாதிய மதவாத கட்சிகளை எதிர்த்து வருகிறார். கட்சியை மட்டுமல்ல, கூட்டணியையும் கட்டமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அதிமுக நீர்த்துப்போய்விட்டது. பாமக விலை போய்விட்டது.
அவர்களை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் நுழையப் பார்க்கிறது. பாஜகவுக்கும், திமுக தலைமையிலான கூட்டணிக்குமான யுத்தமாக இத்தேர்தலை பார்க்க வேண்டும். தமிழ்நாடு என்பதை தட்சிண பிரதேஷ் என பெயர் மாற்றம் செய்வதாக பாஜக அறிவித்து இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.

மேலும், “சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார்கள். அதிமுக, பாமக என யார் வெற்றி பெற்றாலும், அவர்கள் பாஜகதான். அந்த கூட்டணி கட்சிகளை அடியோடு புறந்தள்ள வேண்டும். 234 தொகுதிகளிலும் முழுமையாக வெற்றி பெற வேண்டும். ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால்தான் சாதிய,மதவாத சக்திகளை துரத்த முடியும்.” என்றும் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

Advertisement:

Related posts

கல்விக் கடனில் தமிழகம் முதலிடம்

Jeba

மொயீன் அலியிடம் வலிமை பட அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்; வைரல் வீடியோ

Jeba

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை வேண்டும்: பிரதமருக்கு ராகுல் கடிதம்!

Ezhilarasan