செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

திமுக- காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி: சி.டி.ரவி

திமுக-காங்கிரஸ் கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி போடிநாயக்கனூர் தேர்தல் பரப்புரையில் விமர்சித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்து பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி வாக்கு சேகரித்தார்.

பின்னர் அக்கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பேசிய சி.டி.ரவி, போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய, அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்றி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக- பாஜக கூட்டணி இயற்கையான கூட்டணி என்றும், திமுக-,காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி எனவும் கூறினார்.

Advertisement:

Related posts

நான் அனைத்து சமுதாயத்தினருடன் இயல்பாக பழகக் கூடியவன்: கடம்பூர் ராஜூ!

Karthick

கருத்து கணிப்புகள் மக்களை திசை திருப்ப திமுக நிகழ்த்தும் மாயாஜாலம் – டிடிவி தினகரன்

Saravana Kumar

அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க தலைமை ஆசிரியர் மேற்கொள்ளும் வித்தியாசமான முயற்சி!

Jeba