கோவையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காயமடைந்ததால் மருத்துவர்களின் அறிவுறையால் தற்போது அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.
கோவையில் பூ சந்தை அருகே ஆர்.எஸ். புரம் பகுதியில் இன்று காலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அங்கு அவருடன் பேசவும், செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கூடினர். அப்போது எதிர்பாராதவிதமாக யாரோ ஒருவர் தவறுதலாக கமலின் காலை மிதித்துள்ளனர். இதில் அவரின் அறுவைச் சிகிச்சை செய்த காலில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர் மருத்துவமனைக்குச் கொண்டு சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், கமலின் காலில் வீக்கம் இருப்பதால் ஓய்வு அவசியம் தேவை என மருத்துவர்கள் அறிவுறை வழங்கியதால் அவர் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் கமல்ஹாசன் இன்று மேற்கொள்ளவிருந்த பரப்புரையில் சிறுது மாற்றம் செய்யப்படுவதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement: