தமிழகம் முக்கியச் செய்திகள்

சிதம்பரம் அருகே ராட்சத முதலை பிடிபட்டது!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த ராட்சச முதலையை வனத்துறையினர் போராடி பிடித்தனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வீரமுடையாநத்தம் என்ற கிராமத்திற்குள் நள்ளிரவில் புகுந்த முதலை, வீட்டில் நின்றிருந்த மாட்டை வேட்டையாட முயன்றது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாட்டின் உரிமையாளார் முதலையை விரட்டியதில் அது அருகே உள்ள வயலில் சென்று பதுங்கிக் கொண்டது.

கிராமமக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீசர், 3 மணி நேரம் போராடி, 300 கிலோ எடையும், எட்டு அடி நீளமும் கொண்ட முதலையை பிடித்தனர். இதையடுத்து, அந்த முதலையை, அருகில் உள்ள வக்ரமாரி ஏரியில் விட கொண்டு சென்றனர். வெள்ளாற்றில் இருந்து இரைதேடி முதலை ஊருக்குள் புகுந்து இருக்கலாம் என வனத்துறையின தெரிவித்தனர்.

Advertisement:

Related posts

தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா; 15 ஆயிரத்தை கடந்த பாதிப்பு

Ezhilarasan

சாலையோரம் வசிப்போருக்கு உதவிக்கரம் நீட்டிய நெதர்லாந்து இளைஞர்!

Jayapriya

தமிழகத்தில் புத்தெழுச்சி பெற்றுள்ள காங்கிரஸ்!

L.Renuga Devi