விளையாட்டு

எந்த பந்துவீச்சாளரும் நிகழ்த்தாத புதிய சாதனை படைத்த அஸ்வின்..

டெஸ்ட் போட்டியில் இடது கை பேட்ஸ்மேன்களை 200 முறை வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது இரு அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர் அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இந்திய அணியை பொருத்தவரை அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் வரிசையில் சுழற்பந்தில் அஸ்வின் அசத்தி வருகிறார். அதுவும் இந்திய மண்ணில் மற்ற நாட்டு வீரர்களுக்கு அவர் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். இந்நிலையில், அவர் நேற்றைய போட்டியின்போது ஜோ ரூட், ஸ்டூவர்ட் பிராட் ஆகிய 2 இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எடுத்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் இடது கை பேட்ஸ்மேன்களை 200 முறை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் யாரும் இத்தனை முறை இடதுகை பேட்ஸ்மேன்களை வீழ்த்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

டெஸ்ட் அணியிலும் இடம்பெற்றார் நடராஜன்!

Niruban Chakkaaravarthi

பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி!

Saravana

முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா

Nandhakumar

Leave a Comment