இந்தியா உலகம் செய்திகள் முக்கியச் செய்திகள்

ஆஸ்திரேலியாவிலும் ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி நிறுத்திவைப்பு!

ஆஸ்ட்ராசெனிகா கொரோனா தடுப்பூசியால் ரத்தக் குழாயில் அடைப்புக் ஏற்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்களுக்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதாக பல நாடுகளில் புகார்கள் எழுந்துள்ளன.

இதனால் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பைன், டென்மார்க், நார்வே, நெதர்லாந்து, சுவேடன் மற்றும் லாட்வியா உள்ளிட்ட நாடுகளில் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவும் ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை இளைஞர்களுக்கு செலுத்துவதை அந்நாட்டு அரசு நிறுத்திவைத்துள்ளது. 50 வயதுக்கு குறைவான நபர்களுக்கு ஆஸ்ட்ராசெனிகா செலுத்தும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் ஒரு கோடியே 70 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்துப்பட்டுள்ளது. அதில் 40 பேருக்கு ரத்தக் குழாயில் அடைப்பு பிரச்னை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ரத்தக் குழாயில் அடைப்பு மற்றும் பக்க விளைவு காரணமாக அமெரிக்காவிலும் ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி உறுபத்தியை குறைத்துள்ளது.

இந்தியாவில் ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி, சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட் பெயரில் விநியோகிக்கப்படுகிறது. ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசியில் ஆபத்து குறைவு என்று கூறும் வேலூர் மருத்துவக் கல்லூரியின் வைராலஜிஸ்ட் கங்கன்தீப், ஐரோப்பா நாடுகளில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியதில் ஒருவர் என்ற அடிப்படையில்தான் பாதிக்கப்படுவதாக ஐரோப்பா மருத்துவ முகாமை தெரிவித்ததை மேற்கொள்காட்டுகிறார்.

சில நபர்கள் இந்த தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவது எதிர்பார்த்த ஒன்றுதான், ஆனால் அதனோடு ரத்த அணுக்களும் குறைந்தால்தான் பாதிப்பு அதிகம், அதைதான் நாம் கவனிக்க வேண்டும் என கங்கன்தீப் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளால் பொதுமக்கள் யாருக்கெல்லாம் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவது குறித்து கவனிக்க வல்லுநர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.

Advertisement:

Related posts

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பைக் கண்காணிக்கப் பாகுபாடற்ற குழு அமைக்கப்படும்- உச்சநீதிமன்றம்

Karthick

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட மாமாவிற்காக புதிய கண்டுபிடிப்பு: அசத்திய 14 வயது சிறுமி

Jayapriya

பாமக இடம்பெறும் கூட்டணியில் தேமுதிக இடம்பெறாதா? பிரேமலதா பதில்!

Ezhilarasan