செய்திகள்

தேர்தலில் குடும்பக் கட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள்: தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி!

தேர்தலில் குடும்ப கட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள் என தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய இணை அமைச்சருமான கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜக அறிவுசார் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, இணை பொறுப்பாளர் வி.கே சிங், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேடையில் பேசிய வி.கே.சிங், வாரிசு மற்றும் குடும்ப கட்சி நமக்கு தேவையில்லை என்றார். தமிழ் மொழி மிகவும் பழமையானது, அதை கற்று கொள்ள ஆசைப்படுகிறேன் என விருப்பத்தை வெளிப்படுத்திய அவர், இந்திய மக்கள் நாடு மீதும் தற்போதுள்ள மோடி ஆட்சி மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும் என கூறினார்.

பின்னர் பேசிய கிஷன் ரெட்டி, பாஜக தென் தமிழகத்திற்கு எதிரான கட்சி, மேல் சாதிக்கான கட்சி, இந்துக்களுக்கு மட்டுமான கட்சி என தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது எனவும், தமிழகத்தில் வரும் தேர்தலில் மக்கள் குடும்ப கட்சியை புறக்கணிப்பார்கள் எனவும் கூறினார்.

Advertisement:

Related posts

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை!

Saravana

விவசாயிகளின் போராட்டத்திற்கும், அரசியல் கட்சிகளுக்கும் தொடர்பு இல்லை: பிரதமருக்கு விவசாயிகள் கடிதம்!

Saravana

பாடகி ரிஹானாவை புகழும் ட்வீட்டுகளுக்கு லைக் செய்த ட்விட்டர் நிறுவனத் தலைவர் ஜாக் டோர்சே!

Jayapriya