தமிழகம் முக்கியச் செய்திகள்

திமுக கூட்டணியில் அதிக இடங்கள் கேட்போம்: கே.எஸ்.அழகிரி தகவல்!

புதுச்சேரியில் ஆளுநர் மூலம் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சி செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, தேர்தல் தேதி அறிவித்ததும் திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடம் கேட்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

புதுச்சேரியில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை செயல்படாமல் தடுக்க கிரண்பேடியை மோடி அனுப்பி இருந்ததாகவும் தற்போது ஆட்சியை கவிழ்க்க தமிழிசையை அனுப்பி உள்ளார் என்று விமர்சித்த அழகிரி, இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளது எனக் குற்றம்சாட்டினார்.

மோடிக்கு பொருளதாரம் தெரியாததால் தவறாக வரி விதிப்பின் முலம் வழிநடத்துகிறார். மக்களுக்கு பொய்யான தகவலை தருகிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்தப்படும். பாஜகவில் நடிக்க ஆட்கள் இல்லாததால் நடிகர், நடிகைகளை சேர்க்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

Advertisement:

Related posts

லெஹெங்காவில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட போதைப்பொருட்கள்!

Jayapriya

வாட்ஸ் அப்பில் வீடியோக்களை மியூட் செய்யும் வசதி: சோதனையில் புதிய அப்டேட்!

Jayapriya

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்

Niruban Chakkaaravarthi