தமிழகம் முக்கியச் செய்திகள்

விமர்சனத்திற்கு உள்ளாகும் முடிவுகளை எடுக்கமாட்டேன்: வைகோ

தேர்தல் கூட்டணியில் விமர்சனத்திற்கு உள்ளாகும் முடிவுகளை எடுக்க மாட்டேன் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவையில் மதிமுகவின் நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், ஆகிய மாவட்டங்கள் சார்பாக வசூலிக்கப்பட்ட 80 லட்சத்தி 88 ஆயிரம் ரூபாயை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கட்சி உறுப்பினர்கள் முன்பாக பெற்றுக்கொண்டார். மற்ற கட்சிகள் நிதி திரட்டும் நிலையில் தற்போது இல்லை எனவும், பணத்தை வாரி இறைக்க கூடிய நிலையில் மற்ற கட்சிகள் உள்ளதாகவும் கூறினார்.

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குக் கூட நிதி திரட்டும் நிலை இல்லாத நிலையில் மதிமுக மட்டுமே மக்கள் பணிக்காக இந்த இக்கட்டான சூழ்நிலையில் நிதி திரட்டி வருவதாகவும், தேர்தல் கூட்டணியில் விமர்சனத்திற்கு உள்ளாகும் முடிவுகளை தான் எடுக்க மாட்டேன் எனவும் தெரிவித்தார்.

மதிமுக தமிழக மக்களின் நலனுக்காக குரல் எழுப்பியும் பல போராட்டங்களை முன்னின்று நடத்தியும் உள்ளது, சுற்றுச்சூழல் குறித்தான பல்வேறு போராட்டங்களுக்கு மதிமுகவே அனைத்துக் கட்சிகளுக்கும் முன்னோடி என கூறிய அவர் ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்களை எதிர்த்து முதலில் குரல் எழுப்பியது மதிமுக தான் என்று கூறினார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், தேர்தலுக்கு பின் கட்சியின் பொதுக்குழுவில் அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் வைகோ தெரிவித்தார்

Advertisement:

Related posts

ஆளுநரை சந்தித்து திமுக பொய் புகார் அளிக்கிறது: ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Nandhakumar

12-ம் வகுப்பு பொது தேர்வு தேதி அறிவிப்பு!

Niruban Chakkaaravarthi

பொம்மை யானையை சேதப்படுத்திய காட்டு யானை!

Jayapriya

Leave a Comment