இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

மக்கள் யாரும் மாஸ்க் அணிய தேவையில்லை – பாஜக அமைச்சர்

அசாமில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத காரணத்தால் இனி மக்கள் யாரும் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அசாமில் ஏப்ரல் 4ஆம் தேதி கொரோனா பாதிப்பின் நிலவரப்படி, 515 பேர் நோய்த்தொற்றால் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள காரணத்தால், மக்கள் யாரும் முகக்கவசம் அணியத் தேவையில்லை என அம்மாநில சுகாதாராதுறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தெரிவித்துள்ளார். மேலும், அசாமில் பிஹு பண்டிகையை மக்கள் கொண்டாடுவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அமைச்சர், “அசாமில் கொரோனா போய்விட்டது. பொதுமக்கள் முகக்கவசத்தை அணிய வேண்டாம். ஒருவேளை கொரோனா தாக்கம் இங்கு மீண்டு அதிகரித்தால். மக்கள் அனைவரையும் முகக்கவசம் அணிய நான் வலியுறுத்துகிறேன் அப்போது அவர்கள் அணியாவிட்டால் ரூ. 500 கூட அபராதம் விதிக்கலாம்.” எனத் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

“வணிகர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கே ஆதரவு” – விக்கிரமராஜா

Niruban Chakkaaravarthi

கண்கலங்கிய முதல்வர், மன்னிப்புகோரிய ஆ.ராசா!

Karthick

80 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை 2 மணி நேரமாக போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்!

Jayapriya