சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும், நாளை நடைபெற உள்ளது. தேர்தலை அமைதியாக நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று இரவு தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 955 தங்கும் விடுதிகள் மற்றும் 3 ஆயிரத்து 862 திருமண மண்டபங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 67 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 48 நபர்கள் மீது நன்னடத்தை பிணை உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Advertisement: