தமிழ்நாடு – புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்ப படிவம் 1,000 ரூபாயும், விண்ணப்பிக்கும் போது பொதுத் தொகுதிக்கு 25 ஆயிரம் ரூபாயும், தனித் தொகுதிக்கு 15 ஆயிரம் ரூபாயும் பெறப்படுகிறது. விண்ணப்ப படிவங்களை காலை முதலே ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து திமுகவினர் வாங்கிச் செல்கின்றனர்.
விண்ணப்பித்தவர்களிடம் மார்ச் 2ம் தேதி முதல் 5ம் தேதிவரை நேர்காணல் நடத்தவும் திமுக திட்டமிட்டுள்ளது.
Advertisement: