செய்திகள்

33வது பிறந்த நாளை கொண்டாடும் அனுஷ்கா ஷர்மா பற்றிய அறியப்படாத தகவல்கள்!

தனது 33 வது பிறந்த நாளை கொண்டாடும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, ஒரு தனித்துவம் வாய்ந்த பெண் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அவர் வாழ்க்கையில் எடுத்துக்கொண்ட வெவ்வேறு பாத்திரங்களைப் பற்றிய தொகுப்பே இது.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் பட்டியலில் முக்கியமானவர் அனுஷ்கா ஷர்மா, இவர் 33 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சமீபத்தில்தான் இவருக்கு வாமிகா என்ற பெண்குழந்தை பிறந்தது. இவரை ஒரு நடிகையாக மட்டுமே பார்க்க இயலாது. ஒரு தனி ஆளுமையாக பார்க்கும் அளவுக்கு பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளார்.

நடிகையாக அனுஷ்கா

ஒரு நடிகையாக அனுஷ்கா ஷர்மா முதலில் கமர்ஷியல் திரைப்படங்களிலேயே நடித்தார். ஆனால் காலப்போக்கில் அவர் அற்புதமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்துள்ளார். பிகே, பாம்பே வெல்வெட், பரி, சஞ்சு, சீரோ போன்ற படங்களில் இவர் நடித்த கதாபாத்திரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. பாலிவுட்டின் முக்கிய கதாநாயகர்களான ஷாருக்கான், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், அமிர்கான் உள்ளிட்ட நடிகர்களுடன் அவர் நடித்திருக்கிறார். எழுத்தாளராக, குத்துச்சண்டை வீராங்கனையாக, ஆராய்ச்சியாளராக, முதலாளியாக, பேயாக இப்படிப் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

தயாரிப்பாளராக அனுஷ்கா

25 வயதிலே அவர் தயாரிப்பாளராக மாறினார். 2015ம் ஆண்டில் NH10 என்ற படத்தை அவரது சகோதரருடன் இணைந்து தயாரித்தார். மேலும் அமேசானில் பதால் லோக் ( Paatal Lok) என்ற வெப்சீரிஸை அவர் தயாரித்தார். எதிர்காலத்திலும் அவர் சில படங்களை தயாரிக்க உள்ளார்.

அனுஷ்காவும் கோலியும்

கோவுடன் அவருக்கு காதல் ஏற்படும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இருவரும் முதலில் நன்றாகக் காதலித்து வந்தாலும், அவர்களுக்குள் ஒரு பிரிவு ஏற்பட்டது. அப்போது அனுஷ்கா ஷர்மாவை விராட் கோலியின் ரசிகர்கள் விமர்சித்தனர். அப்போது விராட் கோலி ரசிகர்களின் இந்த கருத்துக்குக் கண்டனம் தெரிவித்தார். மேலும் இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர் கோலியைத் திருணம் செய்துகொண்டார். திருமணம் நடக்கும் முன்புவரை, அவர்கள் திருமணச் செய்வது குறித்து எந்த தகவலும் கசியவில்லை.

தாயாக அனுஷ்கா

கடந்த கொரோனா ஊரடங்கின் போதுதான் அனுஷ்கா கருவுற்றார். அவர் 9 மாத கர்ப்பமாக இருக்கும்போது தலைகீழாக நின்று உடல் பயிற்சி செய்தார். மேலும் அவர் டிரெட்மில்லில் வேகமாக ஓடி பயிற்சிகள் செய்தார். இதன் மூலம் கருவுற்ற பெண்களுக்கு எதுவுமே தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டினார். மேலும் அவர் தொடர்ந்து படங்கள் நடித்தார்.

நடிப்பும் தாய்மையும்

வாமிகா பிறந்த சில மாதங்களிலேயே அவர் நடிப்பதற்குச் சென்றுவிட்டார். விளம்பரங்கள், திரைப்படங்களில் அவர் நடிக்கத் தொடங்கினார். இதன் மூலம் அவர் ஒரு சிறந்த இல்லத்தரசியாகவும் அதுபோலவே தொடர்ந்து வேலைகளையும் அவர் செய்து வந்தார். இதனால் அவரை ஒரு நடிகையாக மட்டுமே பார்ப்பது தவறு. அவர் ஒரு தனித்துவம் வாய்ந்த ஆளுமை.

Advertisement:

Related posts

அதிமுகவில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம்!

Gayathri Venkatesan

கொரோனா பலி எண்ணிக்கையை முற்றிலும் கட்டுப்படுத்திய தமிழகம்!

Niruban Chakkaaravarthi

திருமணத்தை தாண்டிய உறவு: கணவனை கொலை செய்த மனைவி-காதலனுடன் கைது!

Gayathri Venkatesan