செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

அமைச்சர் பாண்டியராஜன் மீது அனிதாவின் சகோதரர் புகார்!

அமைச்சர் பாண்டியராஜன் மீது அனிதாவின் சகோதரர் மணிரத்னம் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார்.

அமைச்சர் பாண்டியரஜனின் ட்விட்டர் பக்கத்தில் இன்று நீட் தொடர்பான வீடியோ பகிரப்பட்டது. பதிவிட்ட சிறிது மணிநேரத்தில் இந்த வீடியோ அவர் கணக்கிலிருந்து நீக்கப்பட்டது. ஆனால் தனது ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்ட வீடியோவை தான் பகிரவில்லை என்று தற்போது அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனிதாவின் சகோதரர் இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அமைச்சர் பாண்டியராஜன் பகிர்ந்த வீடியோ அனிதாவை அவமதிப்பதாக இருக்கிறது என்றும் நீட் தேர்வுக்கு ஆதரவளிப்பதாக இருக்கிறது என்றும் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமைச்சர் பாண்டியராஜன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவி அனிதா, அத்தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்கு எதிராக பல போராட்டங்கள் இதைத்தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

Advertisement:

Related posts

கோரை புல் விலை உயர்வு, பாய் நெசவாளர்கள் பாதிப்பு!

L.Renuga Devi

ஆர்டிஐ மனுக்கள் நிராகரிப்பது குறைக்கப்பட்டுள்ளது!

L.Renuga Devi

அமமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா?

Gayathri Venkatesan