இந்தியா

ஆந்திராவில் லாரி – மினிபேருந்து மோதிய கோர விபத்தில் 8 பெண்கள் உட்பட 14 பேர் பலி

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே லாரி – மினிபேருந்து மோதிய விபத்தில், 8 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 18 பேர் மினி பேருந்தில், தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் அஜ்மீருக்கு மினிபேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற பேருந்து கர்னூல் மாவட்டம் மாதாபுரம் அருகே சென்ற போது, எதிர்பாரவிதமாக எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மினி பேருந்தில் பயணம் செய்த 8 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:

Related posts

பாரத ரத்னா எம்ஜிஆர், பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்! – பிரதமர் மோடி

Nandhakumar

விண்ணிற்கு செல்லவிருக்கும் பிரதமர் மோடியின் புகைப்படம்!

Jeba

ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்டு கொலை செய்த கணவன்; மும்பையில் அரங்கேறிய கொடூரம்!

Saravana

Leave a Comment