இந்தியா குற்றம்

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வர மறுத்த நண்பர் மீது காரை ஏற்றி கொலை… ஆந்திராவில் அரங்கேறிய கொடூரம்!

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வர மறுத்த நண்பர் மீது காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், வார்டு கவுன்சிலராக உள்ளார். நேற்று இரவு இவர், தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, உடன் மது அருந்திய சின்னா என்பவர், தனது வீட்டில் நடைபெறவுள்ள பிறந்தநாள் விழாவில் பங்கேற்க ரமேஷ்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிறந்த நாள் விழாவிற்கு வரமுடியாது என ரமேஷ் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற சின்னா, காரை வேகமாக ரமேஷின் மீது மோதியும், அவரது உடல் மீது காரை மூன்று முறை ஏற்றியும் உள்ளார். பின்னர், அவர் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.

உடனிருந்த நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், உயிருக்கு போராடிய ரமேசை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார். சின்னாவை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Related posts

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்!

Jeba

”இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும்”- மமதா பானர்ஜி!

Jayapriya

பிபிஇ கிட் கழிவுகளை பயன்படுத்தி படுக்கைகள் தயாரித்த வடிவமைப்பாளர்!

Saravana

Leave a Comment