செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

வன்னியர்களுக்கு பழனிசாமியால்தான் உள்ஒதுக்கீடு கிடைத்தது: அன்புமணி

வன்னியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தான் உள் இடஒதுக்கீடு கிடைத்ததாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், டெல்டா மாவட்டங்களில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் அதிமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.

முதலமைச்சராக வேண்டும் என மு.க.ஸ்டாலின் துடிப்பதாக சாடினார். தமிழகத்தில் விவசாயி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற அலை வீசுவதாகவும் அவர் தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு கிடைத்திருப்பதாகவும் இதேபோல், அனைத்து சாதியினருக்கும் உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

விரைவில் மாமனிதன்… இயக்குநர் சீனுராமசாமி

Niruban Chakkaaravarthi

குஷ்புவுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அமித்ஷா!

Karthick

பயணத்தை தொடர்ந்தது எவர் கிவன்!

Karthick