தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

பண மூட்டைகளை நம்பி துரோக கூட்டணி போட்டியிடுகிறது:டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையில் நடைமுறைக்கு சாத்தியமான விஷயங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பண மூட்டைகளை நம்பி துரோக கூட்டணி போட்டியிடுகிறது என மயிலாடுதுறையில் தேர்தல் பரப்புரையில் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை நேற்று மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,“ திமுக – காங்கிரஸ் கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தினார். திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் மக்களின் செல்வங்கள் எல்லாம் கொள்ளையடிக்கும் சூழல் உருவாகும். இதேபோன்று பணபலத்தை மட்டுமே நம்பி களமிறங்கிய மற்றொரு கூட்டணிக்கும் மக்கள் தக்கபாடம் புகட்ட வேண்டும்.

பண மூட்டைகளை நம்பி துரோக கூட்டணி போட்டியிடுகிறது. தொடர்ந்து நாகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலுக்காக 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற பெயரில் அனைத்து சமுதாய மக்களையும் தமிழக முதல்வர் ஏமாற்றியுள்ளதாகச் சாடினார். மேலும் வெளிப்படையான நிர்வாகத்தை மேற்கொள்ள அமமுக-விற்கு மக்கள் ஆதரவு அளித்திட வேண்டும். அமமுகவின் தேர்தல் அறிக்கையில் நடைமுறை சாத்தியமான திட்டங்களைத் தான் குறிப்பிட்டுள்ளோம். உள் ஒதுக்கீட்டில் அனைத்து சமுதாயத்திற்கும் எந்தவித பாகுபாடுமின்றி சம உரிமை கிடைத்திட அமமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என கூறினார்

Advertisement:

Related posts

தடுப்பூசி என்றால் பக்க விளைவுகள் இருக்கும்: சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன்

Saravana

கூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த கூகுள்!

Saravana

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சக்கர நாற்காலியில் பேரணி!

Karthick