செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

அமமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் பிப். 25ஆம் தேதி அறிவிப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 25 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா, ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாகி கடந்த 9ஆம் தேதி சென்னை வந்தார். தற்போது தியாகராய நகரில் உள்ள இளவரசி வீட்டில் சசிகலா ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 25ஆம் தேதி காலை 9 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவித்துள்ளார்.

கழகத் துணை தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில், காணொலி வாயிலாக பத்து இடங்களை இணைத்து நடைபெறும் இந்தக் கூட்டத்தில், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அழைப்பிதழுடன் கலந்து கொள்ளுமாறு டிடிவி. தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:

Related posts

திஷா ரவி விவகாரம்; காவல்துறை மீது சரமாரி கேள்வி கணைகளை தொடுத்த நீதிமன்றம்!

Karthick

தைப்பூச திருவிழா: பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிப்பு!

Jayapriya

நாராயணசாமி நாயுடு பெயரில் விருது… முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

Saravana