தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

அம்மா உணவகத்தின் பெயர்ப் பலகை கிழிப்பு: இருவர் திமுகவிலிருந்து அதிரடி நீக்கம்!

சென்னை மதுரவாயல், பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர்ப் பலகையைக் கிழித்த இரண்டு பேர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகம் பெயர்ப்பலகையை இருவர் கிழிக்கும் வீடியோ சமூகவலைதளங்கில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக ட்விட்டர் மூலம் பதிலளித்த மா.சுப்பிரமணியம், ‘ சமந்தப்பட்ட நபர்கள் கட்சியிலிருந்து நீக்க ஸ்டாலின் உத்தரவிட்டார் ’என்று பதிவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், ’ சென்னை மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையைக் கிழித்த இருவரும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்தார்.

Advertisement:

Related posts

“அடிக்கல் நாட்டுவதிலேயே ஆர்வம் செலுத்தும் முதலமைச்சர்”-கனிமொழி பேச்சு!

Jeba

மக்களைப் பற்றிக் கவலைப்படுபவன் நான்: ஸ்டாலின் பேச்சு

Karthick

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது!

L.Renuga Devi