மேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில், 3 கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா 4-ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். டோம்ஜூர் பகுதியில் உள்ள பாஜக தொண்டரான, ரிக்சா தொழிலாளி ஒருவரின் வீட்டில் அவர் மதிய உணவு அருந்தினார்.
பரப்புரை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித அவர், மேற்குவங்காளத்தில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி பாஜக ஆட்சியமைக்கும் என்றார். மம்தா பானர்ஜியின் மிகுந்த வெறுப்பில் இருப்பது, அவரது பேச்சிலும், செயலிலும் வெளிப்படுவதாக அமித் ஷா தெரிவித்தார்.
Advertisement: