இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

மேற்கு வங்கம், அசாமில் அமித்ஷா இன்று தேர்தல் பிரச்சாரம்!

பாஜகவின் முக்கிய தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா பாஜக தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களுக்கு இன்று செல்கிறார்.

தனது முதல் பிரச்சார பயணத்தை அசாமில் தொடங்கும் அமிஷாவிற்கு பாஜக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டத் தேர்தல் மார்ச் 27ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1ம் தேதியும் முன்றாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. பாஜக கூட்டணியில் அசோம் கனா பர்ஷத் மற்றும் யுனைடெட் பீப்பில் பார்டி லிபரல் கட்சி இடம் பெற்றுள்ளது. இதில் 92 தொகுதிகளில் பாஜகவும் 26 தொகுதிகளில் அசோம் கனா பர்ஷத் மற்றும் 8 தொகுதிகளில் யுனைடெட் பீப்பில் பார்சி லிபரல் கட்சியும் தொகுதி உடன்படிக்கை செய்துள்ளது. இதைத்தொடர்ந்து மார்கர்டா மற்றும் நசிரா பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்றயுள்ளார்.

அசாமில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு இன்று மாலை அமித்ஷா மேற்கு வங்கம் செல்கிறார். இதைத்தொடர்ந்து நாளை( திங்கள்) மேற்கு வங்கத்தில் உள்ள ஜர்கிரம் மற்றும் ரணிபந்த் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். மேற்கு வங்கத்தில் இம்மாதம் மார்ச் மாதம் 27ம் தேதி துவங்கும் தேர்தல் எட்டு கட்டங்களாக ஏப்ரல் 29 தேதிவரை நடைபெறுகிறது. முதல்கட்டமாக 57 தொகுதிகளுக்கான பாஜவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

Advertisement:

Related posts

அய்யா வைகுண்டரின் அவதாரத் திருவிழா: சென்னையில் ஊர்வலம்!

Karthick

கூகுளுக்கு போட்டியாக விரைவில் வருகிறது Zoom Email…

Jayapriya

மேற்கு வங்கத்தில் பாஜகவின் வெற்றி உறுதி: அமத்ஷா பேச்சு

Jeba