தமிழகம் முக்கியச் செய்திகள்

நாகர்கோவிலில் நாளை அமித்ஷா தேர்தல் பரப்புரை!

நாளை தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாகர்கோவில் சுசீந்திரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் பாஜக, 20 சட்டப்பேரவை தொகுதிகளிலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, நாளை காலை 11 மணி அளவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்குகிறார்.

இதனையடுத்து அவர் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, “வெற்றிக் கொடி ஏந்தி வெல்வோம்” என்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். இதனையொட்டி அமித்ஷாவிர்கு பாதுகாப்பு அளிப்பதற்காக, 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் பகுதிகளில் மோப்ப நாய்களை கொண்டும், மெட்டல் டிடெக்டர் கொண்டும், தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement:

Related posts

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ்: முதல்வர் அறிவிப்பு!

Nandhakumar

கொரோனாவை ஐந்தே நாட்களில் குணப்படுத்தும் Inhaler

Jayapriya

ஒரு வாக்குச்சாவடியில் 1,000 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு!

Niruban Chakkaaravarthi