அமெரிக்காவைச் சேர்ந்த மாடலான கமிலா கோல்மன் தன்னுடைய நெற்றி நீளத்தின் அளவை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டு நெற்றின் அளவை குறைத்துள்ளார்.
அமெரிக்காவில் வசித்துவருபவர் 26 வயதான மாடல் கமிலா கோல்மன். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவர் தன்னுடைய நெற்றி 8.5 செ.மீட்டர் இருந்த காரணத்தால் அதனை அறுவை சிகிச்சை மூலம் குறைத்து தன்னை அழகுப்படுத்திகொண்டுள்ளார். இந்த அறுவை சிகிச்சைக்காக அவர் இந்திய மதிப்பில் ரூ.5 லட்சம் செலவு செய்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுவாகப் பெண்களுக்கு இருக்கும் நெற்றின் அளவைவிட கமிலாவின் நெற்றியின் நீளம் 2 செ.மீட்டர் கூடுதல் நீளமாக இருந்தது. தற்போது அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு கமிலாவின் நெற்றின் அளவு 5.5 செ.மீட்டராக குறைந்துள்து.“முன்பெல்லாம் நெற்றின் அளவு அதிகமாக இருந்த காரணத்தால் தலையில் முக்காடு போட்டுச் செல்ல வேண்டியதாக இருந்தது. பெரிய நெற்றியால் அவமானமாக உணர்ந்தேன். தற்போது அறுவை சிகிச்சைக்குப் பிறகு தன்னம்பிக்கை பெற்றதாக உணர்கிறேன்” என கமிலா கூறியுள்ளார்.