நேசமணி, 2020 வரிசையில் தமிழகத்தில் அமெரிக்க – இந்தியா மீம்கள் ட்ரெண்டாகி வருகிறது.
மக்கள் சமூகவலைதளங்களில் அதிக நேரத்தை செலவிடுவது மீம்ஸ்களுக்காக என்றே கூறலாம். வலி, சந்தோஷம், பாதிப்புகளை ஆகியவகைகளை சொல்வதை விட மீம்ஸ் மூலம் பார்க்கும் போது அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மீம் கிரியேட்டர்களும் இணையவாசிகளுக்கு போராடிக்காத வகையில் அவ்வபோது ஏதேனும் ஒரு காண்சப்டை வைத்து மீம்ஸ்களை அள்ளி வீசுவார்கள். அதற்கு உதராணம் நேசமணி மீம்ஸ். அந்த வகையில் தற்போது மீம் கிரியேட்டர்கள் எடுத்துள்ள அமெரிக்கா – இந்தியா காண்சப்ட் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.
ஒரே விஷயம் அமெரிக்காவில் நடந்தால் எப்படி இருக்கும், இந்தியாவில் நடந்தால் எப்படி இருக்கும் என்பதே இதன் காண்சப்ட். இதனை கையில் எடுத்துக்கொண்டுள்ள தமிழக மீம் க்ரியேட்டர்கள் அரசியல், காதல், காமெடி என பல நையாண்டியான மீம்களை தெரிக்கவிட்டு வருகின்றனர்.

