செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

கொரோனா காலத்தில் உரிய நிவாரணம் வழங்கியவர் முதல்வர் பழனிசாமி – அன்புமணி ராமதாஸ்

கொரோனா காலத்தில், பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் அளித்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில், தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், அவரது மகன் உதயநிதிக்கும் கொள்கை குறித்தோ, சமூகநீதி குறித்தோ ஏதாவது தெரியுமா என்று கேள்வி எழுப்பினார்.

இது எதுவுமே தெரியாத மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை மட்டும் அதிகமாக இருப்பதாக அவர் கூறினார். கொரோனா காலக்கட்டத்தில், உலகம் முழுவதும் மக்கள் வருவாயையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிப்பதாக குறிப்பிட்ட அன்புமணி ராமதாஸ், ஆனால், தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு உரிய நிவாரணத்தை அளித்ததாக தெரிவித்தார்.

மேலும், அதிமுக அறிவித்துள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் நிதியுதவி, ஆண்டுக்கு ஆறு எரிவாயு சிலிண்டர்கள், விவசாயிகளுக்கு மானியம், கல்வி கடன் ரத்து போன்ற திட்டங்கள் பொதுமக்களுக்கு பயன் தரக்கூடியவை என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்புகளை மநீம வெளியிடுமா?

Gayathri Venkatesan

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றமா? நாளை அறிவிக்கிறது நேபாள அரசு!

Jayapriya

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசன வசதிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

Dhamotharan