அமேசானின் அலெக்ஸா சாதனத்தை பயன்படுத்தும் பயனாளிகள் தற்போது நண்பர்களுடன் பாடல்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெசானின் அலெக்ஸா செயலி மூலம் பயனாளிகள் தனக்கு பிடித்த எந்த ஒரு பாடலையும் உடனடியாக தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

அலெக்ஸா செயலியில் நண்பரின் பெயரை குறிப்பிட்டு,“அலெக்ஸா, இந்த பாடலை பகிர்” என்று சொன்னால் போதுமானது. உடனடியாக உங்கள் நண்பருக்கு அப்பாடல் சென்றுவிடும். உங்கள் நண்பர் அப்பாடலுக்கு கருத்து தெரிவிக்கும் வசதியும் இதில் உண்டு. மேலும், உங்கள் நண்பர் சந்தா செலுத்தவில்லை என்றாலும், அவரால் நீங்கள் பகிர்ந்த பாடலை கேட்க இயலும். இந்த வசதி வெறும் ஆரம்பம் தான் என்று அந்நிறுவனம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement: