குற்றம்

திருமணம் செய்வதாக ஏமாற்றிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

புதுச்சேரியில், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் முத்திரப்பாளையத்தை சேர்ந்தவர் அல்போன்ஸ் (25). இவர் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள நாவற்குளத்தில் கார் ஒட்டுநராக பணி புரிந்து வருகிறார். அத்துடன் இவர் பணி புரியும் வீட்டின் எதிரே உள்ள 19 வயது பெண்னை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தனது காதலி வீட்டிற்கு அடிக்கடி செல்லும் அவர் திருமணம் செய்துக் கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை அவருடன் தனிமையில் இருந்துள்ளார். அதன்பிறகு அந்த பெண், அல்போன்சிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு, எனக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகி உள்ளதாக கூறி, அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து கோட்டகுப்பம் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அல்போன்சை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement:

Related posts

காதலனின் பிரிவை தாங்க முடியாத பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

Saravana Kumar

10 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை!

Jayapriya

மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது.

Jayapriya

Leave a Comment