செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

அதிமுகவின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் – முதல்வர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சி திமுக என விமர்சனம் செய்தார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி இலவச வாஷிங்மெஷின் உள்பட அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்படும் என்றார்.

தமிழகத்தில், சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு பாதுகாப்பாக இருப்பதாகவும், இதனால், சாதி, மத சண்டைகள் இல்லாமல் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகவும் முதலமைச்சர் கூறினார்.

இதையடுத்து குறிஞ்சிப்பாடி பரப்புரையில் முதலமைச்சர் பேசியதாவது, தமிழகத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில், குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட அவர், நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் கூறினார். புதிய வேளாண் சட்டங்களால் விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய முடியும் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியினர் வர மறுப்பதாக குற்றம்சாட்டினார்.

Advertisement:

Related posts

மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் வசூல்!

Saravana Kumar

பாடப்புத்தகத்தில் புரோகிதர் போல் சித்தரிக்கப்பட்ட திருவள்ளுவர்; அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு

Saravana Kumar

மத்திய அரசு உடனடியாக விலையேற்றம் செய்யப்பட்ட சிலிண்டர் விலையைத் திரும்பப் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Niruban Chakkaaravarthi