இந்தியா சினிமா செய்திகள் முக்கியச் செய்திகள்

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும் 93,248 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 513 பேர் உயிரிந்துள்ளனர். இதுவரை 1,24,85,509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் . இந்நிலையில் தற்போது இந்தி நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கதில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் பதிவிட்ட ட்வீட்டில் ‘ எனக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி என்னை நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னோடு தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’ இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

“உங்கள் ஊழல் விளையாட்டு தொடராது” – மமதாகவுக்கு பிரதமர் எச்சரிக்கை!

Ezhilarasan

கொப்பரை தேங்காய் குறைந்த பட்ச ஆதார விலை உயர்வு!

Jeba

தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பு வாக்காளர் தகவல் சீட்டு: தேர்தல் அதிகாரி

Karthick