செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

ஜனநாயகக் கடமையாற்றிய நடிகர் அஜித்!

தமிழகச் சட்டமன்ற தேர்தலான இன்று முன்னணி நடிகரான அஜித் குமார் தனது மனைவி ஷாலினியுடன் சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது. கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.அசாம், மேற்கு வங்கத்திலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. திரையுலக நட்சத்திரமான நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் வாக்களிக்கச் சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடிக்குக் காலை 6.30 மணிக்கு வந்தார். இதைத்தொடர்ந்து அவரும், ஷாலினியும் வாக்களித்தனர்.

Advertisement:

Related posts

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை!

Niruban Chakkaaravarthi

மெரினாவில் குவியத் தொடங்கிய குப்பைகள்: தூய்மை பணி தீவிரம்!

Jayapriya

“தேர்தல் அரசியலை தாண்டி சேவை அரசியலை முன்னெடுக்கிறேன்”:சைதை துரைசாமி

Karthick