முக்கியச் செய்திகள்

மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை; ஜெ.பி.நட்டா நம்பிக்கை

மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும், என பாஜகவின் அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில், ஜெ.பி.நட்டா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுகவினர் மீது திட்டமிட்டு வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை. வருமான வரித்துறையினர் சோதனை என்பது முழுக்க முழுக்க துறை ரீதியிலான நடவடிக்கையே என தெரிவித்தார்.

மேலும், இந்துக் கடவுளை அவமதித்த கறுப்பர் கூட்டத்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏன் கண்டிக்கவில்லை?, என்று ஜெ.பி.நட்டா கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலம் மற்றும் மண் பரிசோதனை மேற்கொள்வதல், சில சிக்கல்கள் உள்ளதாகவும், விரைவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்றும், ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

அதிமுகவில் விருப்பமனு தாக்கல் செய்த அனைவருக்கும் நேற்று ஒரே நாளில் நேர்காணல்

Saravana Kumar

திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்திற்கு மாற்றம் தேவை – சரத்குமார்

Gayathri Venkatesan

மும்பை ரயில் நிலையத்தில் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள்!

Karthick