தமிழகம் முக்கியச் செய்திகள்

அதிமுக குறைந்தது 214 தொகுதிகளில் வெற்றி பெறும் – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக குறைந்தது 214 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்தார்.

திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த தேர்தலை விட நான்கு மடங்கு அதிகமாக வாக்குகள் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுக மக்களுக்கு சிறப்பான பணிகளை செய்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஏறத்தாழ 17 லட்சம் விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகப் பதவி ஏற்பார் என்றும் சீனிவாசன் குறிப்பிட்டார்.

Advertisement:

Related posts

ஒட்டிப்பிறந்த அரிதான இரட்டை குழந்தைகள்

Karthick

மாநில உரிமைகளை திராவிட கட்சிகள் பறிகொடுத்துவிட்டன – சீமான் விமர்சனம்

Gayathri Venkatesan

”ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக தொடங்கப்படுபவைதான் நாளைய பெருநிறுவனங்கள்”- பிரதமர் மோடி!

Jayapriya