பொள்ளாச்சி பகுதியில் வெள்ளை ஈக்களால் தென்னை மரங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் உறுதியளித்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், இன்று மாவட்டத்தின் நகர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
வெங்காய சந்தை பகுதியில் வாக்கு சேகரித்த அவர், அதிமுக ஆட்சியில் வியாபாரிகள் நிம்மதியாக இருப்பதாக தெரிவித்தார். காய்கறி சந்தையின் கட்டமைப்பு சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் பெருமிதம் தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். இதனால் நோய் தாக்குதல் பரவாமல் தடுக்க, தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், விரைவில் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும் என உறுதியளித்தார்.
Advertisement: