இந்தியா

தமிழகத்தில் அதிமுக அரசு ஹாட்ரிக் சாதனையாக ஆட்சி அமைக்கும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

ஹாட்ரிக் சாதனையாக மூன்றாவது முறை, தமிழகத்தில் அதிமுக அரசு ஆட்சி அமைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ‘முதலமைச்சரின் பிரச்சாரம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றதாகவும், மக்கள் விரும்பும் ஆட்சியாக அதிமுக ஆட்சி இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, கொரோனாவை கட்டுப்படுத்தியது, பொங்கல் பரிசாக 2500 ரூபாய், 2000 மினி கிளினிக் என அனைத்தும் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, ஹாட்ரிக் சாதனையாக, மூன்றாவதாக் இம்முறையும், தமிழகத்தில் அதிமுக அரசு ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.

Advertisement:

Related posts

நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல்!

Jayapriya

பிரிட்டன் விமானங்களுக்கான போக்குவரத்துத் தடை ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிப்பு!

Saravana

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு நடைமுறைகள்: நான்கு மாநிலங்களில் ஒத்திகை!

Jayapriya

Leave a Comment