எதிர் வரும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் 5-வது கட்ட தேர்தல் பரப்புரையில், ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “அதிமுக சாதி, மதம் சாராத கட்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பேசிய முதல்வர் பழனிசாமி, “சமூக வலைத்தளங்கள் மூலம் எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். எனினும், அதிமுக இளைஞர்கள் நிறைந்த கட்சி என்பதால், தவறான பரப்புரைகள் முறியடிக்கப்படும். இளைஞர்கள்தான் தமிழகத்தை ஆளப்பிறந்தவர்கள், தேர்தல் என்ற போர் அறிவித்தவுடன், களத்தில் தொண்டர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு தீவிரமாக பணியாற்ற வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தல், ஒரு முன்னோடியான தேர்தலாக இருக்கும்.” என கூறியுள்ளார்.

மேலும், “மாணவ, மாணவியருக்கு தேவையான அனைத்தையும், அரசு வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. அதிமுக சாதி, மதம் சாராத கட்சி.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement: