செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி தமிழகத்தை தலை நிமிர்த்தும் – பொன்.ராதாகிருஷ்ணன்

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றிபெற்றால் தமிழ்நாடு தலை நிமிரும் என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிமுக பாஜக கூட்டணியின் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நாகர்கோவிலை அடுத்த கொட்டாரத்தில் நடைபெற்றது.

இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலின் பாஜக வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது “தமிழக சட்டப்பேரைவைத் தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோரின் வெற்றி என்பது வெற்றி அல்ல. அதிமுக – பாஜக கூட்டணி வெற்றிபெற்றால் தமிழக மக்கள் வெற்றி பெறுவார்கள் அதுதான் வெற்றி. இந்தக் கூட்டணி வெற்றிபெற்றால் தமிழகம் தலை நிமிரும்.” என்றார். இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாஜக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement:

Related posts

இரண்டாம் ஆண்டாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த இங்கிலாந்து ராணி

Saravana Kumar

ரியல் எஸ்டேட் துறையில் ஊழல் அதிகரித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

Gayathri Venkatesan

நடப்பாண்டில் 10-ஆயிரம் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விற்க திட்டம்

Jeba